April 25, 2024

மாம ன் னன் பட வில்ல னின் ம னைவி யையும் விட்டு வைக்கா த ரசிக ர்கள் ..!! அடக் கொடு மையே இ ப்ப டியா செய் வது ..?? த லையை பிச்சுக் கும் இய க்குனர் மா ரி செல் வ ராஜ் ..!!

பொதுவாகவே படங்களில் ஹீரோவாக நடிக்கும் நடிகர்களை தான் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாடி வருவார்கள் . ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது.  சம்பந்தமே இல்லாமல் வில்லன் நடிகர்களை கொண்டாடி வருகின்றனர் . அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் ,

வடிவேலு , பகத் பாசில் , கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகர்,  நடிகைகள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . குறிப்பாக இந்த திரைப்படம் எல்லோரும் சமம் என்ற விஷயத்தை பேசியிருந்தது . மேலும் இந்த படத்தில் ரத்னவேலு என்ற கதாபாத்திரத்தில் ,

நடித்திருந்தவர் தான் மலையாள நடிகர் பகத் பாசில் . அப்படி அந்த கதாபாத்திரத்தில் ஒரு ஜாதி வெறி பிடித்த மனிதராகவே நடித்து அசத்தியிருந்தார் நடிகர் பகத் பாசில்.  ஆனால் தற்போது அதைத்தான் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . அந்த வகையில் பகத் பாசிலின் புகைப்படத்தை வைத்து,

ஜாதி பெருமை பேசும் பாடல்களோடு ஒப்பிட்டு வருகின்றனர் ரசிகர்கள் . தற்போது இதுதான் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் இதுவே இன்னும் ஓயவில்லை , அதற்குள் மாமன்னன் படத்தில் பகத் பாசிலின் மனைவியாக நடித்த,

ரவீனா ரவியையும் வச்சி செய்து வருகின்றனர் ரசிகர்கள் . அந்த வகையில் ரத்னவேலு பொண்டாட்டி ரசிகர்கள் என்று அலப்பறை செய்து வருகின்றனர் . இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மாரி செல்வராஜ் தலையால் அடித்துக் கொண்டு வருகிறாராம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *