May 2, 2024

லியோ படம் பார்த்த சூப்பர் ஸ்டார் ..!! இப்படி சொல்லுவாருன்னு யாரும் எதிர்ப்பார்க்கல ..!! வருத்தத்தில் லியோ படக்குழுவினர்கள் ..!!

சமீபத்தில் வெளியான லியோ படத்திற்காகத்தான் விஜய் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருந்தனர் . அப்படி கடந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜின்  இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் விஜய் ரசிகர்களை மட்டுமே பூர்த்தி செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இரண்டாம் பாதியில் சொதப்பி விட்டார் என்று பலரும் ,

தங்களுடைய விமர்சனத்தை கூறி வருகின்றனர்.  இன்னும் சொல்லப்போனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இரண்டாம் பாதியில் நான் சொதப்பி விட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவை ,

சேர்ந்த பல பிரபலங்கள் லியோ படத்தை பற்றி கூறி வந்த நிலையில்,  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும்  தன்னுடைய விமர்சனத்தை கூறி இருக்கிறார்.  அந்த வகையில் லியோ படத்தின் தயாரிப்பாளரான லலித் குமாரை பார்த்த ரஜினிகாந்த் ” புரொடக்ஷன் வேல்யூ அதிகமாக இருக்கும் போல “,

என்று மட்டும்தான் சொல்லியிருந்தாராம்.  மேலும் நல்ல படம் எது வந்தாலும் நேரிலேயோ அல்லது போனிலேயோ  வாழ்த்து சொல்லும் ரஜினிகாந்த் லியோ படத்தை பார்த்து இது மட்டும் தான் சொல்லி இருக்கிறார் . இதற்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 171 வது படத்தை,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . எல்லா படத்தையும் பாராட்டும் சூப்பர் ஸ்டாரே  இப்படி சொல்லிவிட்டதால் லியோ படக்குழுவினர்கள் அப்செட்டில் உள்ளார்களாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *