April 27, 2024

” லேடி சூப்பர் ஸ்டார் ” பட்டம் தான் எனக்கு முக்கியம் ..!! தொடர் தோல்வியால் நயன்தாரா எடுத்த முடிவு ..!! இனி எந்த மூஞ்ச வச்சிக்கிட்டு வருவீங்க..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை நயன்தாரா.  மலையாள படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நயன்தாரா கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ஐயா என்ற படத்தின்  மூலம் தமிழ் சினிமாவிற்கு  நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை நயன்தாரா.  அது மட்டுமல்லாமல் தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டு வந்தார் நயன்தாரா.  பின்னர் ஒரு கட்டத்தில் கதாநாயகி முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து,

நடித்தும் பிரபலமானார் நயன்தாரா . இதனால் இவருடைய மார்க்கெட் உயர்ந்தது மட்டுமல்லாமல் , சம்பளமும் கோடிக்கணக்கில் உயர்ந்தது . ஆனால் அதெல்லாம் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த வகையில் சமீபத்தில் நயன்தாரா,

நடித்த ஜவான் திரைப்படத்தை தவிர அவருடைய நடிப்பில் வெளியான எந்த  திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை . இதனால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை தக்க வைத்துக் கொள்வதற்காக அதிரடி முடிவு எடுத்துள்ளாராம் நயன்தாரா.  அதாவது எப்போதும்,

படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நயன்தாரா இனிமேல் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின் தலைகாட்ட முடிவு செய்து இருக்கிறாராம்.இதைப் பார்த்த ரசிகர்கள் இனி எந்த மூஞ்சியை வைத்து வருவீர்கள் என்று கேள்வி எழுப்பி விடுகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *