April 27, 2024

இது வ ரை பலரு ம் பார்த் தி டாத இசை யமை ப்பாளர் ஹா ரிஸ் ஜெய ரா ஜின் குடு ம்ப புகை ப்படங் கள் இ தோ ..!!

ஹாரிஸ் ஜெயராஜ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.  ஆரம்பத்தில் ஏ ஆர் ரகுமான் , இளையராஜா போன்ற பல இசையமைப்பாளருடன் பணியாற்றி வந்த ஹாரிஸ்  ஜெயராஜ் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் தன்னுடைய இசையால் கவர்ந்து விட்டார் ஹாரிஸ் ஜெயராஜ் .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து மஜ்னு , 12B , சாமுராய், லேசா லேசா, சாமி ,கோவில் ,காக்க காக்க, செல்லமே, அருள் , அந்நியன் , கஜினி ,வேட்டையாடு விளையாடு போன்ற பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து கொடி கட்டி பறந்து வந்தார் இசையமைப்பாளர்  ஹாரிஸ் ஜெயராஜ். குறிப்பாக தமிழ் சினிமாவின் ,

முன்னணி நடிகர்களான கமல் ,விஜய் ,அஜித் ,சூர்யா ,விக்ரம் போன்ற பல நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ் . ஆனால் சமீப காலமாக இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.  இருந்தாலும் இவர் பழையபடி மீண்டும் இசையமைக்க வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இதனிடையே சுமா என்பவரை திருமணம் செய்து கொண்டார் ஹாரிஸ் ஜெயராஜ் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் , ஒரு மகள் உள்ளனர்.  இந்நிலையில் இதுவரை பலரும் பார்த்திராத இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் குடும்ப புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *