April 29, 2024

வெட்டப்பட்ட தலையுடன் உக்கிரமாக நிற்கும் விஷால் ..!! போஸ்டரே மிரட்டுதே ..!! மூன்றாவது சம்பவத்துக்கு தயாரான ஹரி – விஷால் கூட்டணி ..!!

தமிழ் சினிமாவை கலக்கி வரும் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஷால்.  கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகராக அறிமுகமானார் நடிகர் விஷால் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சண்டக்கோழி, திமிரு ,தாமிரபரணி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் விஷால் .

இதன் பிறகு இவர் நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.  ஆனால் சமீபத்தில் இவருடைய வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது . இதை அடுத்து ,

தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ரத்னம் என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் விஷால் . ஏற்கனவே ஹரி- விஷால் கூட்டணியில் வெளியான தாமிரபரணி,  பூஜை போன்ற திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது .

இதைத்தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியுள்ளது.  அந்த போஸ்டரில் ஒரு கையில் அருவாளுடன்,

மறுக்கையில் வெட்டப்பட்ட தலையுடன் வெறித்தனமாக போஸ் கொடுத்திருந்தார் நடிகர் விஷால்.  இந்த திரைப்படம் கோடை கால விடுமுறையில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *