April 28, 2024

அடுத்த ஆதி குணசேகரன் வந்தாச்சு ..!! அதிரடியாக வெளியான எதிர்நீச்சல் ப்ரோமோ ..!! எந்த நடிகர் தெரியுமா ..??

சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்றுதான் எதிர்நீச்சல் சீரியல் . இந்த சீரியலில் மதுமிதா , கனிகா , பிரியதர்ஷினி , ஹரிபிரியா,சபரி , கமலேஷ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர் .  கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை  டிஆர்பி யில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறது .

அதற்கு முக்கிய காரணமாக இருந்தது அந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து தான்.  இவர் பேசிய யம்மா ஏய் ஒரு வசனம் தான் இந்த சீரியலை பெரிய அளவில் பிரபலமாக்கியது .  இதன் பிறகு மாரிமுத்துகாகவே எல்லோரும்,

எதிர்நீச்சல்  சீரியலை பார்க்கத் தொடங்கினார்கள் . ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மாரடைப்பால் மாரிமுத்து இறந்து விட்டார் .  இதன் பிறகு அவருடைய இடத்தை யார் பூர்த்தி செய்யப்போகிறார்கள் என்ற கேள்வி இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் எதிர்நீச்சல்,

சீரியலின் ப்ரோமோவின் ஆதி குணசேகரன் மீண்டும் வருவதாக வெளியிட்டுள்ளனர் . அதில் அவருடைய காலை மட்டும் தான் காட்டியுள்ளனர்.  இதனால் கண்டிப்பாக அந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி ,பசுபதி , அழகம் பெருமாள் போன்றவர்களில் யாராவது ஒருவர் ,

நடிக்கலாம் என்று கூறப்படுகிறது . இதனால் வரும் நாட்களில் இந்த சீரியல் பழையபடி டிஆர்பியில் முன்னிலை வகுக்கும் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *