April 30, 2024

பெரிய நடிகையாக ஆனால் தான் திருமணம் ..!! சபதம் எடுத்த இரண்டே நாளில் ..!! பெரிய நடிகருக்கு ஜோடியான ஸ்ரீ திவ்யா ..!!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீதிவ்யா . அப்படி தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீ திவ்யா வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்கார துரை,

காக்கி சட்டை, பென்சில்  ஈட்டி போன்ற பல படங்களில் நடித்திருந்தார் . இருந்தாலும் ஒரு கட்டத்தில் இவருக்கு சுத்தமாக மார்க்கெட் குறைந்தது . இந்நிலையில் முப்பது வயதாகும் ஸ்ரீதிவ்யா இனி பெரிய நடிகையாக மாறினால்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று சபதம் எடுத்திருந்தார் .

அப்படி சபதம் எடுத்த இரண்டு நாட்களிலேயே பெரிய நடிகருக்கு ஜோடியாக உள்ளாராம் ஸ்ரீதிவ்யா . அந்த வகையில் 96 படத்தின் இயக்குனரான பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கார்த்தி நடித்துக்கொண்டு வருகிறார் . அந்த படத்தில் ஸ்ரீதிவ்யா தான் கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *