April 26, 2024

விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம் ..!! பிரபல இயக்குனரை கரம்பிடிக்க போகும் பிரபுவின் மகள் ..!! வயது வித்தியாசம் பார்க்காமல் நடக்கப்போகும் திருமணம் ..!!

தமிழ் சினிமா உலகில் நடிப்பிற்கு ஒரு இலக்கணமாக இருந்து வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.  அவருடைய வாரிசு தான் நடிகர் பிரபு . இவரும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கி கொண்டு வந்தார் . தற்போது இவர் தமிழ் படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே திருமணமான பிரபுவுக்கு விக்ரம் பிரபு என்ற மகனும்,

ஐஸ்வர்யா பிரபு என்ற மகளும் இருக்கின்றனர்.  இதில் பிரபுவின் மகளான ஐஸ்வர்யாவுக்கு சில வருடங்களுக்கு முன்பே அவருடைய உறவினர் மகனான குணால் என்பவருடன் திருமணம் நடந்தது . திருமணமான பிறகு அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிட்டனர்.

ஆனால் திருமணமான பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப வாழ்க்கை சரியாக அமையாததால் , பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்களாம்.  இப்படி இருக்கும் நிலையில் பிரபுவின் மகளுக்கும் பிரபல தமிழ் பட இயக்குனருக்கும்,

திருமணம் நடக்க உள்ளதாம் . அவர் வேறு யாருமில்லை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் . தமிழில் வெளியான திரிஷா இல்லைனா நயன்தாரா ,அன்பானவன் அசராதவன் அடங்காதவன்,  பஹீரா,  மார்க் ஆண்டனி போன்ற படங்களை இயக்கியிருந்த இயக்குனர் ,

ஆதிக் ரவிச்சந்திரனை விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறாராம் பிரபுவின் மகள் . இதற்கும் இருவருக்கும் பல வருடம் வயது வித்தியாசம் உள்ளதாம் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி  வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *