April 30, 2024

ஜோவிகா அந்த டாப் நடிகையை போல வருவா ..!! இன்னும் 20 வருஷத்துக்கு அவளை அசைக்க முடியாது ..!! அடிச்சு சொல்லிய வனிதா ..!!

வனிதா விஜயகுமார் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . ஆனால் இவர் படங்களில் நடித்து பிரபலமானதை விட பிக் பாஸில் கலந்து கொண்டு தான் பெரிய அளவில் பிரபலமானார் . மேலும் இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் பல சர்ச்சைகளையும் சந்தித்தார் நடிகை வனிதா விஜயகுமார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய மகளான ஜோவிகாவும்  பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக,

கலந்து கொண்டார் . ஆனால் இவர் வாய் பேச்சில் வனிதாவுக்கே டஃப் கொடுப்பார் என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கும் சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் பேசுவது,  தான் சொல்வது மட்டும் தான் சரி என்று முரண்டு பிடிப்பது,

போன்றவற்றால் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தார் ஜோவிகா . அது மட்டுமல்லாமல் தனக்கு படிப்பே அவசியம் கிடையாது என்று இவர் கூறியது மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது . ஆனால் தமிழில் இவருடைய பெயரை கூட இவருக்கு சரியாக எழுத தெரியவில்லை .

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில்  வனிதா கூறியதாவது,  என்னுடைய மகளுக்கு 18 வயது ஆகிறது . அவள் இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு . குறிப்பாக அவள் இப்போதே பல பேரோட அன்பை சம்பாதித்து வச்சிருக்கா.

இதனால் குறைந்த பட்சம் இன்னும் 20 வருஷத்துக்கு அவளால் சினிமாவில் இருக்க முடியும்.  கண்டிப்பாக எதிர்காலத்தில் திரிஷா , நயன்தாரா மாதிரி பெரிய நடிகையாக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருந்தார் வனிதா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *