April 25, 2024

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ..!! வானில் பறக்க வைத்த மைம் கோபி ..!! அந்த மனசு தான் சார் கடவுள் ..!!

மைம் கோபி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் இருந்தே சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் மைம் கோபி ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தான்.  இந்த படத்தில் பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் பிரபலமானார் நடிகர் மைம் கோபி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து,

மாரி ,உறியடி, கபாலி ,பைரவா ,எட்டு தொட்டாக்கள், வேலைக்காரன், அடங்கமறு ,விஸ்வாசம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகர் மைம் கோபி. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ,

மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியளராக கலந்துக்கொண்டு டைட்டில் வின்னர் பட்டத்தையும் வென்றார் நடிகர் மைம் கோபி .

மேலும் தமிழ் படங்களில் வில்லனாக கலக்கிக்கொண்டு வரும் மைம் கோபி நிஜ வாழ்க்கையில் ஹீரோவாக இருந்து வருகிறார் . அந்த வகையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து வந்த மைம் கோபி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பத்துக்கும் ,

மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை விமானத்தில் அழைத்துச்சென்று அவர்களுடைய ஆசையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகர் மைம் கோபிக்கு பாராட்டுகளை கூறி வருகின்றனர்.  இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *