May 1, 2024

முன்னணி நடிகர்களுக்கே கிடைக்காத வாய்ப்பு ..!! ஜி வி பிரகாஷை தேர்வு செய்த டாப் இயக்குனர் ..!! அப்ப பெரிய சம்பவம் இருக்கு ..!!

ஜிவி பிரகாஷ் குமார் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஆவார்.  இசையமைப்பாளராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஜிவி பிரகாஷ் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் . இதன் பிறகு டார்லிங் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில்,

தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் ஜிவி பிரகாஷ் . குறிப்பாக அண்மைக்காலமாக இவர் தேர்ந்தெடுக்கும் திரைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.  இப்படி இருக்கும் நிலையில் முன்னணி நடிகர்களுக்கே கிடைக்காத வாய்ப்பு ,

ஜிவி பிரகாஷ் குமாருக்கு கிடைத்திருக்கிறது . அந்த வகையில் பிரபல பாலிவுட் இயக்குனர் இயக்க உள்ள புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் ஜிவி பிரகாஷ் குமார் . அவர் வேறு யாரும் இல்லை இயக்குனரும்,  நடிகருமான அனுராக் காஷ்யப் தான் .பாலிவுட் சினிமா உலகில் ,

ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக இருந்து வரும் அனுராக் காஷ்யப்  தமிழில் வெளியான இமைக்கா நொடிகள், லியோ போன்ற படங்களில் நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் இவருடைய படத்தில் நடிப்பதற்கு முன்னணி நடிகர்களே காத்துக் கொண்டிருக்கின்றனர் .

இந்நிலையில் இவர் அடுத்ததாக தமிழில் ஒரு புதிய படம் எடுக்க உள்ளாராம் . அந்த படத்தில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் குமார் நடிக்க உள்ளாராம்.  மேலும் இதற்கு முன்பு அனுராக் காஷ்யப் இயக்கிய ஒரு படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *