May 5, 2024

கும்பிட்ட சாமி எல்லாம் கைவிடல..!! விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம்..!! மருத்துவமனை தரப்பில் விளக்கம்..!!

தற்போது தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும் கேப்டன் விஜயகாந்துக்கு  என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  மேலும் ஆரம்ப காலகட்டங்களில் ரஜினி,  கமலுக்கே ஒரு போட்டியாளராக இருந்து வந்த விஜயகாந்த் பின்னர் ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறினார் . ஆனால் இவருடைய கெட்ட நேரமோ என்னமோ தற்போது உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில்,

கடந்த பதினெட்டாம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . மேலும் அவருக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் இருந்ததால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதனால் ரசிகர்கள் விஜயகாந்த் ,

சீக்கிரம் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள்.  இந்நிலையில் கும்பிட்ட சாமி எல்லாம் கைவிடவில்லை என்று சொல்வது போல விஜயகாந்தின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக  மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுத்துள்ளனர்.  இதனால் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *