April 30, 2024

சூப்பர் ஸ்டார் அவருடன் தான் சண்டை போடணும் ..!! தரமான வில்லனை தேர்வு செய்த லோகேஷ் ..!! எதிர்ப்பார்ப்பை கிளப்பிய தலைவர் 171 ..!!

72 வயதிலும் கூட ஓய்வெடுக்காமல் அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அந்த வகையில் அண்மையில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத் தொடர்ந்து ஜெய் பீம் பட இயக்குனர் இயக்கும் புதிய படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.  இதை முடித்த கையோடு,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்திலும் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த் . மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்திற்கு இப்போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது . குறிப்பாக இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வேறு கோணத்தில் காண்பிக்க,

போகிறேன் என்று சமீபத்திய பேட்டிகளில் கூட கூறியிருந்தார் லோகேஷ் . இப்படி இருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டாரை அவருடன் தான் சண்டை போடணும் என்று தரமான வில்லனை தேர்வு செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ் . அவர் வேறு யாரும் இல்லை ராகவா லாரன்ஸ் தான்.

ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் தான் விக்ரம் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தாராம் . அப்போதிலிருந்தே  ராகவா லாரன்ஸை விடாத லோகேஷ்  சூப்பர் ஸ்டாரின் படத்தில் அவரை எப்படியாவது வில்லன் ஆக்கி விட வேண்டும் என்று அதிரடி,

முடிவெடுத்துள்ளாராம்.  விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனா .? என்ன நடக்கப் போவதோ தெரியல.? என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *