April 30, 2024

என்னுடைய 20 வருட கனவு நிறைவேறிவிட்டது ..!! அஜித்துடன் இணைந்த வில்லன் நடிகர் ..!! உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவை கலக்கிவரும் டாப் நடிகர்கள் வரிசையில் நடிகர் அஜித்தும் ஒருவராவார் . இதனாலேயே  இவருடன் நடிப்பதற்கு பல நடிகர் , நடிகைகள் ஏங்கிக்கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில் என்னுடைய 20 வருட கனவு நிறைவேறிவிட்டது என்று அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் பிக் பாஸ் பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் ஆரவ் தான்.கடந்த 2014 ஆம் ஆண்டு ,

வெளியான அமரக்காவியம் என்ற படத்தின்  மூலம் அறிமுகமானார் ஆரவ். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஓ காதல் கண்மணி,  சைத்தான் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார் ஆரவ் . இதனிடையே  பிக் பாஸ் சீசன் 1ல்போட்டியினராக கலந்து கொண்ட ஆரவ்,

சிறப்பாக விளையாடி டைட்டில் வின்னர் பட்டத்தை வென்றார் .இதன் பிறகு தான் இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது . அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான மார்க்கெட் ராஜா எம் பி பி எஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .

இதை தொடர்ந்து கடந்த வருடம் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கலகத்தலைவன் படத்தில் வில்லனாகவும் நடித்த அசத்தியிருந்தார் நடிகர் ஆரவ். இதை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்திலும்,

நடிக்க உள்ளாராம் ஆரவ். இந்த படத்தில் இவர் வில்லனாக நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இப்படி இருக்கும் நிலையில் என்னுடைய 20 வருட கனவு நிறைவேறிவிட்டது என்று அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார் நடிகர் ஆரவ்…

 

 

View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *