May 8, 2024

” குட் நைட் ” பட நடிகைக்கு விரைவில் டும் டும் டும் ..!! அட, மாப்பிள்ளை இவர் தானா ..?? ஜோடி பொருத்தம் சூப்பர் ..!! வெளிவந்த புகைப்படம் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் தருபுக சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் முதல் நீ முடிவும் நீ .  இந்த படத்தில் கிஷன் தாஸ் ,ஹரிஷ் குமார் ,கௌதம் , வருண் ராஜன் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.  இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர்தான் மீத்தா  ரகுநாத்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே ,

இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் . பின்னர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ” ஜெய் பீம் ” மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார் நடிகை மீத்தா  ரகுநாத் . அறிமுக இயக்குனர்,

விநாயக் சந்திரசேகரன் என்பவர் இயக்கியிருந்த இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை பார்த்ததிலிருந்து மீத்தா போல ஒரு மனைவி வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் ஏங்கினார்கள் .  இப்படி இருக்கும் நிலையில் ,

24 வயதான மீத்தா  ரகுநாத்துக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளதாம் . அந்த வகையில் சமீபத்தில் நடிகை மீத்தா  ரகுநாத்துக்கு நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது . இந்நிலையில் அவருடைய வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தை ,

கலக்கி கொண்டு வருகிறது.  இதை பார்த்த ரசிகர்கள் ஜோடி பொருத்தம் சூப்பர் என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *