April 28, 2024

விஜய் – திரிஷா முத்த காட்சி ..!! கட் சொல்ல மறந்த லோகேஷ் கனகராஜ் ..!! உண்மையை சொல்லிய லியோ பட பிரபலம் ..!!

கடந்த வாரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ . இப்படி வெளியான திரைப்படம் விஜய் ரசிகர்களை பூர்த்தி செய்தது என்று தான் சொல்ல வேண்டும் . ஆனால் மற்ற ரசிகர்கள் எல்லாம் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களையே கொடுத்து வருகின்றனர் , அப்படி இருந்தும் கூட இந்த திரைப்படம் வசூலில் பட்டையை,

கிளப்பி வருகிறது . அதை வகையில் முதல் நாளிலேயே 148 கோடிக்கு மேல் வசூல் செய்த லியோ திரைப்படம் ஒரு வாரத்தில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் ஜோடி சேர்ந்திருந்தார் திரிஷா.

இதுவே இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது.  குறிப்பாக இந்த படத்தில் விஜய்க்கும் , திரிஷாவுக்கும் இடையே முத்த காட்சிகள் எல்லாம் இருந்தது.  இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட லியோ படத்தின் ஒளிப்பதிவாளரான மனோஜ் பரமஹம்சா  கூறியதாவது,

லியோ படத்தில் முத்த காட்சி உள்ளது என்பது எங்களுக்கு தெரியும்.  ஆனால் அந்த இடத்தில் மௌன ராகம் படத்தின் டயலாக்கை வைப்பார் என்று யாருக்குமே தெரியவில்லை.  இன்னும் சொல்லப்போனால் அந்த முத்தக் காட்சியை எடுத்தவுடன் லோகேஷ் கட் சொல்லவே இல்லை.

சந்தோஷத்தில் பேக் கப் என்று சொல்லிவிட்டார் என்று கூறியிருந்தார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா.  இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *