May 1, 2024

நான் உத்தமி எல்லாம் கிடையாது ..!! பிக்பாஸ் வருவதற்கு முன்பே வெளிப்படையாக சொல்லிய மாயா ..!! அப்போ புரியல ,இப்போ புரியுது ..!!

மாயா கிருஷ்ணன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார் . கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் நடிகை மாயா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடரி ,மகளிர் மட்டும் ,வேலைக்காரன், 2.0 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளியான,

விக்ரம் படத்தின் மூலம் தான்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து லியோ ,சர்வர் சுந்தரம் ,துருவ நட்சத்திரம் போன்ற படங்களிலும் நடித்திருந்தார் நடிகை மாயா . இதை அடுத்து தற்போது பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் மாயா . அப்படி பிக் பாஸ் வீட்டிற்குள்,

நுழைந்ததிலிருந்தே  நேக்காக காய் நகர்த்தி வருகிறார் மாயா . இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் வருவதற்கு முன்பு அவர் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது . அந்த வகையில் விக்ரம் படத்தில் விலை மாதுவாக நடித்திருந்தது பற்றி கேள்வி எழுப்பி இருந்தனர் .

அதற்கு பதில் அளித்த மாயா,  நான் அந்த மாதிரியான விஷயத்திற்கு எப்போதும் வெட்கப்படவே மாட்டேன் . இங்கு யாரும்  உத்தமர்களே கிடையாது . அதே போன்று நான் ஒன்னும் பெரிய உத்தமியெல்லாம் கிடையாது . நானும் பல தவறுகளை செய்திருக்கிறேன் .

என்னிடமும் கண்டிப்பாக பல குறைகள் இருக்கும் என்று கூறியிருந்தார் பிக் பாஸ் மாயா.  இதை பார்த்த ரசிகர்கள் அப்போது புரியல , இப்ப தான் புரியுது என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *