April 29, 2024

அந்த விஷயத்தில் என்னுடைய மனைவியும் நீங்களும் ஒண்ணு ..!! பிக்பாஸ் ஜனனியிடம் வெளிப்படையாக சொல்லிய விஜய் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் டாப் நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் விஜய் . இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கும் விஜய் ரசிகர்களின் பேவரைட் நடிகராக இருந்து வருகிறார் . மேலும் சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ,

இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . மேலும் இந்த படத்தில் பிக் பாஸ் ஜனனிக்கு வாய்ப்பு கொடுத்து இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.   அந்த வகையில் இலங்கைப் பெண்ணான ஜனனி பிக் பாஸ் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார்.

குறிப்பாக முதல் படத்திலேயே விஜய்யுடன் இவர் நடித்துள்ளது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது . மேலும் லியோ படத்தில் பிக்பாஸ் ஜனனி சில நிமிடங்கள் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கவர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் .

இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் போது பிக் பாஸ் ஜனனியிடம் பேசிய விஜய் , இலங்கை ரசிகர்கள் குறித்து கேட்டாராம்.  அது மட்டுமல்லாமல் என்னுடைய மனைவியும் இலங்கை தான்,  நீங்கள் பேசுவது அப்படியே என்னுடைய மனைவி பேசுவது போலவே உள்ளது,

என்று பிக்பாஸ் ஜனனியிடம்  கூறினாராம்  நடிகர் விஜய் . இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *