April 30, 2024

தளபதி 68 ல் இணைந்த இளம் கவர்ச்சிக்கன்னி ..!! பார்த்து பார்த்து தேர்வு செய்யும் வெங்கட் பிரபு ..!! அப்ப கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது ..!!

தற்போது நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 68 என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார்.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த் ,பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ,மைக் மோகன் ,ஜெயராம் ,அஜ்மல் ,அமீர், யோகி பாபு,விடிவி கணேஷ், வைபவ் ,பிரேம்ஜி ,அரவிந்த் ஆகாஷ் ,அஜய் ராஜ் போன்ற பல நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது .  இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படி இருக்கும் நிலையில் ஏற்கனவே இந்த படத்தில் மூன்று நடிகைகள் இருந்த நிலையில் நாலாவதாக ஒரு இளம் கவர்ச்சி நடிகை இணைந்துள்ளார்.  அவர் வேறு யாருமில்லை நடிகை மாளவிகா ஷர்மா தான் . பிரபல தெலுங்கு திரைப்பட நடிகையான மாளவிகா ,

கடந்த வருடம் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காபி வித் காதல் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார் . இந்த படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் கலக்கி இருப்பார் நடிகை மாளவிகா ஷர்மா . இதை அடுத்து தற்போது இரண்டாவது படத்திலேயே,

தளபதியுடன் இணைந்துள்ளார் நடிகை மாளவிகா ஷர்மா. இந்நிலையில் இந்த சந்தோஷமான விஷயத்தை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை மாளவிகா . இதனால் இந்தப் படத்தில் கவர்ச்சிக்கு பஞ்சமே இருக்காது என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *