April 26, 2024

லோகேஷுக்கு லவ் மூடு ஸ்டார்ட் ஆயிருச்சு ..!! கூட இருப்பது யாருன்னு தெரியுதா ..?? சர்ப்ரைஸாக வெளியான புகைப்படம் ..!!

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கிய பிரபலமான  லோகேஷ் கனகராஜ் மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் படத்திலேயே முத்திரையை பதித்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். பின்னர் இந்த படத்தை  தொடர்ந்து கார்த்தியை வைத்து கைதி ,

விஜய்யை வைத்து மாஸ்டர், லியோ ,கமலை வைத்து விக்ரம் என்று தொடர்ச்சியாக பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.  குறிப்பாக இவருடைய படங்களில் கஞ்சா, வெட்டு குத்து, ரத்தம் ,துப்பாக்கி சத்தம்,

என்றுதான் இருக்கும் . ஆனால் தற்போது தன்னுடைய ரூட்டையே மாற்றி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.  அந்த வகையில் அடுத்ததாக இயக்குனர்  லோகேஷ் கனகராஜை  வைத்து காதல் பாடல் ஒன்றை இயக்க உள்ளாராம் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன்.

இந்தப் பாடலை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாம் . ஏற்கனவே இந்த பாடலின் ஒரு புகைப்படம் வெளியாகி ரசிகர்களை குழப்பத்துக்கு ஆளாக்கியது . இதைத் தொடர்ந்து நடிகை ஸ்ருதிஹாசன் கையை ,

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பிடித்திருப்பது போல ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது . இதைப் பார்த்த ரசிகர்கள் லோகேஷுக்கு இனிமேல் லவ் மூடு  ஸ்டார்ட் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *