May 2, 2024

எப்பவும் நல்ல படம் தான் ஜெயிக்கும் ..!! வசூலில் மாஸ் காட்டும் சித்தா ..!! ராகவா லாரன்ஸ் , ஜெயம் ரவிக்கு பயத்தை காட்டிய சித்தார்த் ..!!

தமிழ் சினிமாவை பொருத்தவரை எப்போதும் நல்ல படங்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் . அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது . அப்படித்தான் தற்போது நடந்திருக்கிறது.  அந்த வகையில் கடந்த வாரம் மூன்று தமிழ் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.  ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான சந்திரமுகி 2,ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் ,

சித்தார்த் நடிப்பில் வெளியான சித்தா  போன்ற மூன்று திரைப்படங்களும்  விடுமுறை நாட்களை குறி வைத்து வெளியாகி இருந்தது.  ஆனால் இப்படி வெளியான படங்களில் முதல் நாளிலேயே மோசமான வரவேற்பை  பெற்று வசூலில் அடி வாங்கி வருகிறது ,

ஜெயம் ரவியின் இறைவன் திரைப்படம் . இந்த படத்தைத் தொடர்ந்து சந்திரமுகி 2 ஆரம்பத்திலிருந்தே வசூலில் மாஸ் காட்டி வந்தது.  ஆனால் தற்போது சந்திரமுகி 2 வின் வசூல் குறைந்து கொண்டே வருகிறதாம் . இந்த லிஸ்ட்டில் ஆரம்பத்தில் பெரிய அளவில் வரவேற்பை பெறாத,

சித்தார்த்தின் சித்தா திரைப்படம் தற்போது பெரிய அளவில் வரவேற்பை  பெற்று வருகிறது.  அந்த வகையில் இயக்குனர் எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தை சித்தார்த் தான் தயாரித்திருந்தார் . 6 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் தற்போது வரை,

11.5 கோடி வசூல் செய்துள்ளதாம் .  அது மட்டுமில்லாமல் தற்போது  சித்தா படத்திற்கு தியேட்டர்களும் அதிகரித்துள்ளதாம். இதனால் சந்திரமுகி 2 , இறைவன் படங்கள்  வசூலில் அடி வாங்கும் என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *