April 26, 2024

முதல் வன் 2 வை கை யிலெ டுத்த ஷ ங்கர் ..!! ஆ னா , ஹீ ரோ அர் ஜுன் இல் லை ..!! அ ப்ப இ வர் தா ன் ஹீ ரோ வா ..?? வெளி யான தக வலா ல் கொண்டா ட்டத் தில் ரசி கர் கள்..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 1999 ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முதல்வன் . இந்த படத்தில் அர்ஜுன் உடன் இணைந்து மனிஷா கொய்ராலா, ரகுவரன், லைலா ,மணிவண்ணன், வடிவேலு, விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இப்படி வெளியான திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் இந்த திரைப்படம்,

சாதனையை படைத்தது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படம் வெளியாகி 23 வருடங்கள் ஆன நிலையில் இந்தப் படத்தில் இரண்டாம் பாகத்தை இயக்குவதற்கு ரெடியாகிவிட்டாராம் இயக்குனர் ஷங்கர் . அந்த வகையில் முதல்வன் 2 படத்தின் கதையை தயார் செய்து வருகிறாராம் ஷங்கர் .இந்த படத்தில் அர்ஜுனுக்கு பதிலாக,

விஜய் நடிப்பதற்கு நிறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது . குறிப்பாக ஏற்கனவே ஷங்கர் -விஜய் கூட்டணியில் வெளியான நண்பன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இவர்கள் கூட்டணி அமைக்க உள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *