April 22, 2024

11 வயதிலேயே அஜித்தை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட நடிகை ..!! இதற்கு அஜித் என்ன சொன்னார் தெரியுமா ..?? இப்போது வெளிப்படையாக சொல்லிய நடிகை ..!!

தற்போது தமிழ் திரையுலகில் பிரபல டாப் நடிகராக கலக்கி கொண்டு வருபவர் நடிகர் அஜித்.  இப்போது தான் தலைக்கு டை அடிக்காமல் நடித்துக் கொண்டு வருகிறார் நடிகர் அஜித்.  ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் இவருடைய அழகில் மயங்காத ரசிகர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு அப்போது பெண் ரசிகைகளின் கனவு கண்ணனாக இருந்து வந்தார் நடிகர் அஜித் . அப்படி அந்த நேரத்தில் அஜித்திடம்,

தன்னுடைய காதலை கூறியிருக்கிறார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை சரண்யா நாக் தான் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த சரண்யா கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான காதல் படத்தில் நடிகையாக நடித்திருந்தார் . இப்படி இருக்கும் நிலையில் ,

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சரண்யா அஜித் பற்றி பேசி இருந்தார் . அந்த வகையில் அஜித் நடிப்பில் வெளியான நீ வருவாய் என படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தாராம் நடிகை சரண்யா . அப்போது அஜித்திடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள கேட்டாராம் சரண்யா .

உடனே கேமராமனை அழைத்து அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம் . அப்படிஅந்த புகைப்படம் எடுத்த பிறகும் அஜித்தையே பார்த்துக் கொண்டிருந்தாராம் சரண்யா.  உடனே அஜித் என்ன என்று கேட்டாராம் . நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க என்று சரண்யா  கூறினாராம்.

உடனே அஜித் வெட்கப்பட்டாராம் . பின்னர் உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்டுவிட்டு நான் கொஞ்ச நாள் கழித்து உங்களை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு ஓடி வந்து விட்டாராம் நடிகை சரண்யா.  அப்போது இவருக்கு வயது வெறும் 11 தானாம் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *