April 28, 2024

என்னை கல்யாணம் பண்ணனும்னா ” இதை ” பண்ணுங்க ..!! கணவர் இருக்கும் போதே ..!! இப்படி சொல்லிய ” இந்தியன் 2 ” பட நடிகை ..!!

தற்போது தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் . ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் கலக்கி கொண்டு வந்த நடிகை  காஜல் அகர்வால் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடிப்பில் வெளியான பழனி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் மகான் அல்ல ,மாற்றான் ,துப்பாக்கி ,ஆல் இன் ஆல் அழகுராஜா,

ஜில்லா , மாரி ,பாயும் புலி ,விவேகம் , மெர்சல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக்கொண்டார்  நடிகை காஜல் அகர்வால் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

இப்படி தொடர்ந்து நடித்து வரும் நடிகை காஜல் அகர்வால் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்துக்கொண்டு வருகிறார் . இதனிடையே  கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம்,

செய்து கொண்டார்.  திருமணமான இவர்களுக்கு சமீபத்தில் தான் ஒரு மகன் பிறந்தார் . இப்படி திருமணமான காஜல் அகர்வாலிடம் உங்களை காதலிக்கிறேன்,  என்னை திருமணம் செய்து கொள்வீர்களா .?உங்களுடைய பதிலுக்கு காத்திருக்கிறேன் என்று ரசிகர் ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

இதற்கு கொஞ்சமும் யோசிக்காத நடிகை காஜல் அகர்வால் , கொஞ்சம் முயற்சி பண்ணுங்க , எதுவும் எளிதாக நடந்து விடாது என்று பதில் அளித்திருக்கிறார்.  இதைப் பார்த்த ரசிகர்கள் திருமணம் ஆகியும் இப்படி ஒரு பதிலை காஜல் அகர்வால் சொல்லியுள்ளாரா என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *