April 28, 2024

அடுத்த அஜித் இவர் தான் ..!! அடிச்சு சொல்லும் முக்கிய பிரபலம் ..!! அடுத்த சூப்பர் ஸ்டார் போய் , இப்ப அடுத்த அஜித்தா ..?? யாருன்னு பாருங்க ..!!

தமிழ் சினிமா உலகில் சில மாதங்களுக்கு முன்பு அதிகம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று தான் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி . அதில் நடிகர் விஜய்யின் பெயர் தான் அடிக்கடி அடிபட்டது . ஆனால் இதற்கெல்லாம் லியோ வெற்றி விழாவில் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டும் தான் என்று முற்றுப்புள்ளி வைத்திருந்தார் நடிகர்  விஜய்.  இப்படி இருக்கும் நிலையில் அடுத்த சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து ,

ஓய்ந்த நிலையில் அடுத்த அஜித் இவர்தான் என்று அடித்து சொல்லியுள்ளார் பயில்வான் ரங்கநாதன் . அவர் வேறு யாருமில்லை நடிகர் கவின் தான் .  ஆரம்பத்தில் சீரியல்களில் கலக்கிக்கொண்டு வந்த கவின் நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் .

ஆனால் இப்படி வெளியான  முதல் படத்தில் சறுக்கினாலும் அடுத்தடுத்து வெளியான லிஃப்ட் , டாடா போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானார் . இன்னும் சொல்ல போனால் தற்போது தமிழ் ரசிகர்களின் பேவரைட் நடிகராக மாறிவிட்டார் கவின் .

தற்போது இவர்  ஸ்டார் , ஊர்க்குருவி என்று மூன்று படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் . மேலும் அஜித்தை போலவே இவரும் தன்னுடைய வசீகரமான முகத்தால் பெண் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார் . குறிப்பாக அனைத்து தரப்பட்ட ரசிகர்களும் பார்க்கும் வகையில்,

தான் தன்னுடைய படங்களின் கதைகளை தேர்வு செய்து வருகிறார் நடிகர் கவின் . இதனால் அஜித்தின் இடத்தை கவின் நிரப்புவார் என்று கூறியுள்ளார் பயில்வான் ரங்கநாதன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *