April 26, 2024

மனசா ட்சியே இல்லா மல் 100 கோ டி , 200 கோ டி கேட்கு ம் தமி ழ் நடி கர் கள் ..!! ஆனா ல், மலையா ள ஸ்டார் களி ன் சம் பளம் இவ்வள வு தா னா ..?? இவர் கள் தா ன் உண் மையா ன ஹீ ரோ ..!!

சமீப காலமாக விலைவாசியை விட தமிழ் சினிமா நடிகர்களின் சம்பளம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.  அப்படி ரஜினி, கமல் ,விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்கள் தற்போது 100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்கள் . இப்படி படத்தின் பட்ஜெட்டில் பாதி சம்பளத்தை இவர்களே வாங்கி விடுவதால் சமீபகாலமாக வரும் படங்கள் எல்லாம் சுமாராகவே உள்ளது . அதுவும் அடுத்த படத்திற்கு ரஜினி , விஜய் போன்ற நடிகர்கள்,

200 கோடி சம்பளம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . இப்படி தமிழ் சினிமா உலகில் இருக்கும் பெரும்பாலான நடிகர்கள் 100 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்கள் . ஆனால் மலையாள முன்னணி நடிகர்களின் சம்பளத்தை கேட்டால் நீங்களே ஆச்சி ரியப்படுவீர்கள்.  அந்த வகையில் மலையாள சூப்பர் ஸ்டார்களா க ,

கருதப்படும் மோகன்லால்,  மம்மூட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமா நடிகர்களை விட குறைவான சம்பளம் தான் வாங்குகிறார்களாம் .  அந்த வகையில் மோகன்லால் ஒரு படத்திற்கு 25 கோடி தான் சம்பளம் வாங்குகிறாராம்.  அதோடு மம்மூட்டி ஒரு படத்திற்கு 15 கோடி சம்பளமும் , பிரித்விராஜ் மற்றும் பகத் பாசில் போன்ற நடிகர்கள் ,

ஐந்து கோடி சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது . அதோடு ஒரு சில நேரங்களில் தயாரிப்பாளர்களின் சூழ்நிலையை புரிந்து கொண்டு சம்பளத்தையும் குறைத்துக் கொள்கிறார்களாம் . இதனால் தான் மலையாளத்தில் வெளியாகும் பெரும்பாலான திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெறுவது மட்டுமல்லாமல் ,

நல்ல லாபத்தையும் கொடுக்கிறது.  அதோடு தயாரிப்பாளருக்கும் பெரிய அளவில் நஷ்டத்தை கொடுப்பதில்லை மலையாள திரைப்படம். இதைப் பார்த்த ரசிகர்கள் மலையாள நடிகர்களை பார்த்தாவது தமிழ் நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *