April 28, 2024

சினிமா வேறு மகள் வேறு ..!! மகள் இயக்கும் படத்திற்கே சம்பளத்தை குறைக்காத ரஜினி..!! சில நிமடங்கள் நடித்ததற்கே இத்தனை கோடியா ..??

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட மூத்த முன்னணி நடிகர் ஆவார்.  சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . இதைத்தொடர்ந்து தற்போது மூன்று திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் . அது மட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான,

ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படத்திலும் நடித்திருக்கிறார் ரஜினி.  இந்த படத்தில் விஷ்ணு விஷால் , விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  இந்த படத்தில் ரஜினிகாந்த் ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி இருக்கும் நிலையில் மகள் இயக்கம் படம் என்றாலும் மகள் வேறு , சினிமா வேறு என்று சொல்லி சம்பளத்தை குறைக்காமல் இருக்கிறாராம் ரஜினிகாந்த் . அந்த வகையில் இந்தப் படத்தின் பட்ஜெட்டே  25 கோடி தானாம் . ஆனால் ஆரம்பத்தில் ரஜினிகாந்துக்கு ,

20 கோடி சம்பளம் பேசப்பட்டதாம் . பின்னர் இந்த படத்தின் பட்ஜெட்டை 50 கோடிக்கு மேல் இழுத்துவிட்டாராம் ஐஸ்வர்யா . இதனால் தன்னுடைய சம்பளத்தையும் உயர்த்தி விட்டாராம் ரஜினிகாந்த் . அந்த வகையில் இந்த படத்திற்காக 40 கோடி சம்பளம் கேட்கிறாராம் சூப்பர் ஸ்டார் .

குறிப்பாக இந்த படத்தில் இவர் குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டும்தான் வருவாராம் . அதற்கே இவர் இவ்வளவு சம்பளம் கேட்டது தயாரிப்பாளருக்கு தலைசுற்றி போனதாம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *