May 3, 2024

57 வயாசாச்சு ..!! இன்னும் அந்த தொல்லையை அனுபவிக்கிறேன் ..!! உண்மையை புட்டு புட்டு வைக்கும் லட்சுமி ராமகிருஷ்ணன்..!!

லட்சுமி ராமகிருஷ்ணன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை மற்றும் இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான பிரிவோம்  சந்திப்போம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.  பின்னர்  இந்த படத்தைத் தொடர்ந்து நாடோடிகள் ,வேட்டைக்காரன், பாஸ் என்கிற பாஸ்கரன், யுத்தம் செய் ,போன்ற பல திரைப்படங்களில்,

குணசித்திர நடிகையாக நடித்திருந்தார் . மேலும் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் . அதோடு ஆரோகணம் ,நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர் போன்ற படங்களை,

இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்  . இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஆர் யூ ஓகே பேபி என்ற படத்தை இயக்கியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்  . இந்த படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியதாவது,  எனக்கு 57 வயதாகிறது.

ஆனால் எனக்கே ஊடகத்தில் மரியாதை கிடைக்கவில்லை . இதனால் பல தொல்லைகளை அனுபவித்தேன் .  அப்படி இருக்கும்போது புதிதாக வரும் தொகுப்பாளினிகளுக்கு எப்படி மரியாதை கிடைக்கும் . அப்போது ஒரு நிகழ்ச்சியின் இயக்குனர் என்னை திட்டிய போது அதில் மீண்டு வருவதற்கு,

எனக்கு ஒரு வருடம் ஆனது . அந்த அளவிற்கு அந்த சம்பவத்தால் மனவளைச்சலுக்கு ஆளானேன் . அந்த நேரத்தில் என்னுடைய குடும்பம் தான் எனக்கு பக்க பலமாக இருந்தது என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *