May 3, 2024

நடிச் சா ந யன்தா ரா கூட தா ன் நடி ப்பே ன் ..!! ஒற்றை க்கா லில் நின் ற பிரபல நடி க ர் ..!! உண்மை யை சொல் லி ய இய க்கு னர் ..!!

நயன்தாரா ஒரு பிரபலமான தமிழ் திரைப்படம் முன்னணி நடிகை ஆவார் . ஐயா என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கிய நடிகை  நயன்தாரா இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . அது மட்டுமல்லாமல் பல முன்னணி நடிகர்களின் படங்களின் கதாநாயகியாக நடித்து  பிரபலமானார் நடிகை நயன்தாரா . இப்படி இருக்கும் நிலையில் ,

என் படத்தில் நயன்தாரா தான் நடிக்க வேண்டும் என்று அடம் பிடித்து ஒரு நடிகர் நடிக்க வைத்தாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகர் ஆர்யா தான் . கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியிட திரைப்படம் தான் பாஸ் என்கிற பாஸ்கரன்.

இப்படி வெளியான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படி இருக்கும் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இந்த படத்தின் இயக்குனரான ராஜேஷ் கூறியதாவது,  பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின்  கதையை கேட்டதுமே ஆர்யாவுக்கு ரொம்ப பிடித்து விட்டது.

இதன்பிறகு கதாநாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்று கேட்டபோது,  நயன்தாராவை நடிக்க வேண்டும் என்று ஆர்யா தான் சொன்னார் . ஆனால் நயன்தாரா அந்த நேரத்தில் தான் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகி இருந்தார் . இதனால் கேட்டால் மறுத்து விடுவார் என்று நினைத்தோம்.

அப்படி இருந்த நேரத்தில் ஆர்யாவே அவருக்கு போன் செய்து பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் நடிக்க வைத்திருந்தார் என்று கூறியிருந்தார் .  இதன்பிறகு ஆர்யா மற்றும் நயன்தாரா ராஜா ராணி மற்றும் ஆரம்பம் போன்ற திரைப்படங்களில் ஒன்றாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *