April 29, 2024

மொ த்தம் 2000 கோ டி பட்ஜெ ட் ..!! விஜய் யின் மக னை யும் க ள த்தில் இற க்கி விட் ட லைக் கா ..!! தி ற மை இரு ந்தா லும் , ப ணம் இருந்தா ல் தா ன் வாய் ப்பு கிடை க் கும் போ ல ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2014 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான கத்தி என்ற படத்தை தயாரித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தது லைக்கா நிறுவனம் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கோலமாவு கோகிலா, செக்க சிவந்த வானம் ,வடசென்னை ,2.0 , டான் , பொன்னியின் செல்வன் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை தயாரித்து இருந்தது லைக்கா நிறுவனம் . இதன் மூலம் பெரிய லாபத்தை பார்த்தது லைக்கா நிறுவனம் .

இப்படி இருக்கும் நிலையில் தற்போது 2000 கோடி பட்ஜெட்டை ஒதுக்கி உள்ளார்களாம் லைக்கா நிறுவனம்.  அந்த வகையில் 11 படங்களையும் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளார்களாம்.  அதில் ஜெய் பீம் பட இயக்குனரான டிஜே ஞானவேல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 170 படம் .இயக்குனர் ஷங்கர் ,

இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படம் . இயக்குனர் மகிழ்  திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக உள்ள விடாமுயற்சி திரைப்படம்.  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த் , விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் படம். இயக்குனர்  பி வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் ,

உருவாகி வரும் சந்திரமுகி 2 படம் என்று மொத்தம் பதினோரு படங்களை பிரம்மாண்டமாக  தயாரித்து வருகிறதாம்  லைக்கா நிறுவனம் . அதோடு இந்த களத்தில்  நடிகர் விஜய் யின் மகனையும் இறக்கியுள்ளது லைக்கா நிறுவனம் . அந்த வகையில் நடிகர் விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தான்,

தயாரிக்க இருக்கிறது. நேற்று இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது . மேலும் பல உதவி இயக்குனர்கள் தரமான கதைகளை வைத்துக்கொண்டு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் நிலையில்,  இது போன்ற முன்னணி பிரபலங்களின் வாரிசுகளுக்கு எளிமையாக வாய்ப்பு கிடைப்பது பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *