April 28, 2024

நெல் சன் மு தல் சிவகார்த் திகே யன் வ ரை..!! கவி ன்- மோ னிகா ரிசப் ஷ னில் குவி ந்த சி னி மா பிரப லங் கள் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் இளம் நடிகர்களில் ஒருவராக கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் கவின். ஆரம்பத்தில்  விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் நடிகர்  கவின் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே சினிமாவிலும் கால் தடம் பதித்தார்.  அப்படி அவர் ஹீரோவாக நடித்த திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை .

ஆனால் அதன் பிறகு வெளியான லிப்ட் , டாடா போன்ற திரைப்படங்கள் இவரை புகழின் உச்சத்திற்கே  கொண்டு சென்றது . இதன் பிறகு தான் தவிர்க்க முடியாத இளம் நடிகராக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் கவின்.  மேலும் 33 வயதான நடிகர் கவின் கடந்த வாரம் அவருடைய நீண்ட நாள் தோழியான மோனிகா டேவிட் ,

என்பவரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையாக தான் நடந்தது.  மேலும் திருமணம் எளிமையாக நடந்தாலும் ரிசப்ஷன் பிரம்மாண்டமாக நடைபெற்று உள்ளது.  அப்படி நடிகர் கவினின் ரிசப்ஷனில் நெல்சன் முதல் சிவகார்த்திகேயன் வரை பல சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு ,

கவின்-  மோனிகா ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர் . தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படங்கள் நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *