April 29, 2024

லியோ வில்லனுக்கு தமிழ் கற்றுக்கொடுத்ததே ..!! இந்த பிக்பாஸ் சீசன் 7 போட்டியாளர் தானா ..?? பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம் ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 19ஆம் தேதி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ.  இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய்  தத் , திரிஷா ,அர்ஜுன், மிஷ்கின் ,கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த் ,மடோனா செபாஸ்டின் , சாண்டி மாஸ்டர்,  மன்சூர் அலிகான் , பாபு ஆண்டனி போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் .

இப்படி வெளியான திரைப்படம் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது . அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் இதுவரை 550 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.  மேலும் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் ஹிந்தி நடிகரான சஞ்சய் தத் .

ஏற்கனவே பல படங்களில் வில்லனாக நடித்திருந்தவர் இந்தப் படத்திலும்  தன்னுடைய மிரட்டலான நடிப்பால் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும் . மேலும் நடிகர் சஞ்சய் தத்துக்கு லியோ திரைப்படம் தான் முதல் திரைப்படம் என்பதால்,

இவருக்கு தமிழ் சொல்லிக் கொடுப்பதற்காக லியோ படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கிறார் பிக் பாஸ்  சீசன் 7 பிரபலம் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகை மாயா கிருஷ்ணன் தான்.  இவர் தான் லியோ படத்தில் நடிகர் சஞ்சய் தத்துக்கு தமிழ் மொழி உச்சரிப்பை ,

கற்றுக் கொடுத்திருக்கிறார். அதை தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதே  தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  நடிகை மாயா கிருஷ்ணன் . இதோ அந்தப் புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by Maya S Krishnan (@mayaskrishnan)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *