May 8, 2024

பயில்வானை கொளுத்த வேண்டும் ..!! அது தான் என்னுடைய ஆசை..!! ஓப்பனாக சொல்லிய பிரபல நடிகர் ..!! அவர் மீது இவ்வளவு கோபமா ..??

பயில்வான் ரங்கநாதன் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் விமர்சகர் ஆவார் . முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்  பயில்வான் ரங்கநாதன்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்திருந்தார் நடிகர் பயில்வான் ரங்கநாதன். ஆனால் அண்மை காலமாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி தமிழ் சினிமா நடிகர் ,

நடிகைகளை பற்றிய தேவையில்லாத தகவல்களை பரப்பி சர்ச்சையை கிளப்பி வருகிறார் பயில்வான் ரங்கநாதன் . இதனால் பயில்வான் ரங்கநாதன் மீது பல நடிகர் , நடிகைகள் மிகப்பெரிய கோபத்தில் உள்ளனர் . இப்படி இருக்கும் நிலையில் பயில்வனை கொளுத்த வேண்டும்,

அதுதான் என்னுடைய ஆசை என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர். அவர் வேறு யாரும் இல்லை நடிகர் விஷால் தான்.  சமீபத்தில் விஷாலை பற்றி பேசிய பயில்வான் ரங்கநாதன்,  லட்சுமி மேனனும் விஷாலும் காதலித்தார்கள் என்றும் , பின்னர் விஷாலுக்கு,

நிச்சயதார்த்தம் நடந்த போது லட்சுமிமேனன் தான் அதை தடுத்து  நிறுத்தினார் என்றும் இதனால் தான் விஷாலுக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்று  கூறி இருந்தார் பயில்வான் ரங்கநாதன் .  இதை பார்த்த விஷால் , போகி பண்டிகை அன்னைக்கு எப்படி பழைய பொருட்களை,

எரிப்பார்களோ,  அதே போல பயில்வானையும் சேர்த்து கொளுத்த வேண்டும் . இதுதான் என்னுடைய ஆசை,  இவரெல்லாம் பூமிக்கு பாரமாக இருக்கிற ஆளு என்று வெளிப்படையாக கூறியிருந்தார் நடிகர் விஷால்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *