April 26, 2024

அப்ப யாருக்குமே தெரியல ..!! இந்த பையன் வருங்காலத்தில் பெரிய ஆளா வருவான்னு ..!! இணையத்தை கலக்கும் தனுஷின் இளம் வயது புகைப்படங்கள் ..!!

தனுஷ் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட நடிகர் ,இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முகம் கொண்டவராவார் . இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் இளைய மகனான தனுஷ் கடந்த 2001 ஆம் ஆண்டு அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் . ஆனால் இப்படி வெளியான முதல் படத்திலேயே  பல்வேறு விமர்சனங்களுக்கு ,

ஆளாகியுள்ளார் தனுஷ்.  இன்னும் சொல்லப்போனால் இவனெல்லாம் ஹீரோவா என்று படப்பிடிப்பில் பல பேர் கிண்டல் செய்தார்களாம் . ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாத தனுஷ் தொடர்ந்து காதல் கொண்டேன் ,திருடா திருடி,தேவதையை கண்டேன் ,

புதுப்பேட்டை , பொல்லாதவன் போன்ற திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக ஆடுகளம் திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்று தந்தது.  அதோடு இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் ,

வென்றார் தனுஷ் . தற்போது தனுஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,ஹிந்தி மற்றும் ஆங்கில மொழி படங்களிலும் நடித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்து வருகிறார் . அது மட்டுமல்லாமல் தற்போது தன்னுடைய ஐம்பதாவது படத்தை இயக்கிய முடித்த,

தனுஷ் அடுத்ததாக புது முகங்களை வைத்து ஒரு படத்தையும் இயக்கி வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் பலரும் பாத்திராத நடிகர் தனுஷின் இளம் வயது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *