April 30, 2024

உங் களுக் காக தா ன் காத்தி ருக்கே ன் ..!! சீக்கி ரம் வாங் க த ல ..!! அஜி த் பற் றி உருக் கமா ன பதி வு போ ட்ட இய க்குன ர் மோ கன் ஜி ..!! இத ற்கு அ ஜித் செவி சா ய்ப் பாரா ..??

மோகன் ஜி ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான பழைய வண்ணாரப்பேட்டை என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மோகன்ஜி . ஆனால் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது திரௌபதி படத்தின் மூலம் தான்.  சிறிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ருத்ர தாண்டவம், பகாசூரன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார்  இயக்குனர் மோகன்ஜி . இப்படி இருக்கும் நிலையில் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகராக இருந்து வருகிறார் இயக்குனர் மோகன் ஜி .

அப்படி துணிவு படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் அஜித் . ஆனால் அறிவிப்பு வந்து பல மாதங்கள் ஆகியும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை . இந்நிலையில்,

அவருடைய அடுத்த படம் குறித்து இயக்குனர் மோகன் ஜி பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.  அதில் அவர் கூறியதாவது , உங்களுக்காகத்தான் நான் காத்திருக்கிறேன் தல,  விடாமுயற்சி படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருக்கிறது . ரசிகர்கள் எல்லோரும் உங்களை,

திரையில் பார்ப்பதற்கு காத்திருக்கிறோம் . நீங்க தனியா வாங்க , ஆனா கொஞ்சம் சீக்கிரம் வாங்க ஒரு ரசிகரின் வேண்டுகோள் என்று பதிவிட்டு இருந்தார் இயக்குனர் மோகன் ஜி . அவர் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *