April 29, 2024

விஜய்யை தொடர்ந்து அரசியலில் குதிக்கும் பிரபல நடிகை ..!! இவருக்கெல்லாம் ஓட்டு விழுமா..?? எந்த கட்சி தெரியுமா ..??

தற்போது சினிமா நடிகர் , நடிகைகள் அரசியலுக்கு வருவதற்கு அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.  அந்த வகையில் தற்போது நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . இவரை தொடர்ந்து இன்னொரு நடிகையும் அரசியலில் களமிறங்க உள்ளாராம்.  அவர் வேறு யாருமில்லை நடிகை கங்கனா ரனாவத். ஹிந்தி படத்தின் மூலம் திரைப்படத்தை ,

தொடங்கிய கங்கனா ரனாவத் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து பல வருடங்கள் இடைவேளைக்கு பிறகு மறைந்த முன்னாள் முதல்வர் ,

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான தலைவி என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகை கங்கனா ரனாவத். மேலும் ஹிந்தி சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்த கங்கனா ரனாவத்துக்கு சமீபத்தில் வெளியான சந்திரமுகி 2 உட்பட எந்த திரைப்படமும் ,

வெற்றியை கொடுக்கவில்லை. இப்படி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் தோல்வி அடைவதால் தற்போது அரசியலில் குதிக்க உள்ளாராம் நடிகை கங்கனா ரனாவத் . அந்த வகையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவின் சார்பில் நடிகை கங்கனா ரனாவத் ,

போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த தகவலை நடிகை கங்கனா ரனாவத்தின் அப்பா கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *