April 29, 2024

ஒ ரே படத் தில் மூ ன்று நடி கை களா ..?? பார்த் து பார்த் து தூக்கி ய தனு ஷ் ..!! லிஸ்ட் டில் 18 வய து நடி கையு ம் உள் ளாரா ..?? என் ன நடக்கப் போ குதோ தெ ரிய ல ..??

தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ் . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , ஹிந்தி , ஆங்கில மொழி படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அதோடு சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் , வாத்தி போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது .

தற்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து முடித்த தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50ஆவது படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் . சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் .

மேலும் இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து எஸ் ஜே சூர்யா, விஷ்ணு விஷால் ,காளிதாஸ் ஜெயராம் ,போன்ற பல பிரபலங்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது . இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

அந்த வகையில் சூரரைப்போற்று பட நடிகையான அபர்ணா பாலமுரளி,  சார்பட்டா பரம்பரை பட நடிகையான  துசரா  விஜயன் மற்றும் விஸ்வாசம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த அனிகா சுரேந்திரன் போன்ற மூன்று கதாநாயகிகள் தனுஷின் புதிய படத்தில் இணைந்துள்ளதாக ,

தகவல் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் ஒரே படத்தில் இத்தனை கதாநாயகிகள் அப்ப பெரிய சம்பவம் இருக்கு  போல என்று எதிர்பார்ப்பில் கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *