April 25, 2024

பாதியிலேயே வெளியேறிய பவா செல்லத்துரைக்கு இத்தனை லட்சம் சம்பளமா ..?? பேசியதை விட அதிகமாக கொடுத்த பிக்பாஸ் ..!!

விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தான் பிக் பாஸ் சீசன் 7 கோலாகலமாக தொடங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் எழுத்தாளரும் , நடிகருமான பவா செல்லதுரை . இதுவரை பல புத்தகங்களை எழுதி இருக்கும் பவா செல்லத்துரை தமிழில் வெளியான ஜோக்கர் , குடிமகன் , பேரன்பு , சைக்கோ ,ஜெய் பீம் , வெந்து தணிந்தது காடு ,

போன்ற பல திரைப்படங்களில் துணை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த பவா செல்லத்துரை தன்னுடைய கதையால் சகப் போட்டியாளர்களை கவர்ந்திருந்தார் . இதனால் வரும் நாட்களில் இவர் அனைவருக்கும்,

டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது . ஆனால் இவரால் பிக் பாஸ் வீட்டுக்குள் ஒரு சில டாஸ்க்க்களை செய்ய முடியவில்லை . குறிப்பாக இந்த டாஸ்க்களை செய்வதற்கு அவருடைய உடல் ஒத்துழைக்கவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.  இதனால் பிக் பாஸ்,

வீட்டை விட்டு என்னை அனுப்பி விடுங்கள் என்று கேட்டிருந்தார் பவா செல்லத்துரை.  அப்படி வெளியேறிய பவா செல்லத்துரை வாங்கிய சம்பளம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது . அந்த வகையில் பிக் பாஸில் கலந்துகொள்ள இவருக்கு ஒரு வாரத்திற்கு ,

ஒரு லட்சம் முதல் இரண்டு லட்சம் வரை சம்பளமாக பேசப்பட்டு இருந்ததாம்.  ஆனால் இவர் ஒரே வாரத்தில் பிக் பாஸ் வீட்டை விட்டு சென்றதால் அவருக்கு இரண்டு லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *