April 28, 2024

சாதா மாஸ்டரை ஜிம் மாஸ்டராக மாற்றிய லோகேஷ் ..!! லியோ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்த சாண்டி மாஸ்டர் ..!! வெளியான வெறித்தனமான புகைப்படம் உள்ளே ..!!

சாண்டி மாஸ்டர் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடனக் கலைஞர் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு ரசிகர்களிடையே பிரபலமானார் சாண்டி மாஸ்டர் . பின்னர் படிப்படியாக உயர்ந்த சாண்டி மாஸ்டர் ஒரு கட்டத்தில் தமிழ் படங்களுக்கு நடன ஆசிரியராக பணியாற்றி வந்தார் .

அப்படி இவர் நடனம் அமைத்த காலா ,பரியேறும் பெருமாள், விக்ரம் போன்ற பல திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் சாண்டி மாஸ்டர்.

இப்படி நடந்த கலைஞராக கலக்கிக் கொண்டு வந்த சாண்டி  மாஸ்டர் தற்போது நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பல படங்களில் நடித்திருக்கும்  சாண்டி மாஸ்டர்  தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இயக்கத்தில் விஜய் நடிப்பில்,

உருவாகியுள்ள லியோ படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் .  இப்படி இருக்கும் நிலையில்  ஒல்லியான உடம்புடன் இருந்து வந்த சாண்டி மாஸ்டர் லியோ படத்திற்காக சிக்ஸ் பேக் வைத்து வெறித்தனமாக மாறி இருக்கிறார் . தற்போது அந்தப் புகைப்படம் ,

இணையத்தில் தீயாய் பரவி வருகிறது . இதை பார்த்த ரசிகர்கள் நம்ம சாண்டி மாஸ்டரா இது .? லோகேஷ் கனகராஜ் இவரை வெறித்தனமாக மாற்றி விட்டாரே என்று ஆச்சிரியத்தில்  கூறி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *