April 26, 2024

மாம ன் னன் பட மே கிடை யா து..!! வெளி ப்படையா க சொல்லி ய நடிக ர் சிவ கு மார் ..!! இ தற்கு மா ரி செல்வ ரா ஜ் என் ன சொ ன்னா ர் தெரி யு மா ..??

சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து பகத் பாசில் ,வடிவேலு, கீர்த்தி சுரேஷ், அழகம் பெருமாள் ,ரவீனா ரவி , விஜயகுமார் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார் . இப்படி வெளியான திரைப்படம் ,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல்,  வசூலிலும் சாதனை படைத்தது . இருந்தாலும் இந்த திரைப்படத்திற்கு பலரும் மோசமான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர் .  இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவகுமார் மாமன்னன் படத்தை விமர்சனம் செய்திருக்கிறார் .

அந்த வகையில் அவர் கூறியதாவது,  தம்பி மாரி செல்வராஜுக்கு .! மாமன்னன் திரைப்படத்தை பார்த்தேன்.  இது படமே கிடையாது, உங்களுடைய வாழ்க்கையில் கண்ட வலி.  பாதிக்கப்பட்டவனால் தான் இவ்வளவு ஆழமாக சொல்ல முடியும் . திரைப்படம் மூலம் இன்னும் நீங்கள் சொல்ல வேண்டிய,

செய்தி நிறைய உள்ளது , உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரத் தழுவ  எண்ணுகிறேன்,  விரைவில் சந்திப்போம் என்று கூறியிருந்தார் நடிகர் சிவகுமார் . இதற்கு இயக்குனர் மாரி செல்வராஜ் மிகவும் நன்றி சார் என்று அந்தப் பதிவை தன்னுடைய சமூக,

வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் . அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான  பரியேறும் பெருமாள் படத்தையும் பார்த்து விட்டு மேடையிலேயே சிவகுமார் பாராட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *