April 30, 2024

நானும் இன்னும் சாகவில்லை ..!! உயிருடன் தான் இருக்கிறேன் ..!! இறந்துபோன நடிகை வெளியிட்ட வீடியோ ..!! ஷாக்கில் ரசிகர்கள் ..!!

சமூக வலைத்தளம் என்பது மக்களுக்கு பயன்படும் செய்திகளை பரப்புவதற்காக தான் உருவாக்கப்பட்டது.  ஆனால் அதை தற்போது பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.  அந்த வகையில் ஹிந்தி சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத கவர்ச்சிக்கன்னியாக கொடி கட்டி பறந்து வந்தவர்தான் நடிகை பூனம் பாண்டே.  ஆரம்பத்தில் மாடலாக இருந்து வந்த பூனம் பாண்டே,

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான ஹிந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடிகையாகவும் , ஐட்டம் டான்ஸ்ராகவும் இருந்து வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் 32 வயதான பூனம் பாண்டே நேற்று ,

கேன்சர் நோயால் இறந்து விட்டார் என்று அதிர்ச்சி தகவல் வெளியானது . மேலும் அவருடைய மரணத்திற்கு காரணம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் என்றும் கூறப்பட்டது.  இதனால் ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அவருக்கு இரங்கலை தெரிவித்து இருந்தனர் .

இப்படி இருக்கும் நிலையில் இன்று நான் உயிருடன் தான் இருக்கிறேன், இன்னும் சாகவில்லை என்று வீடியோ போட்டு இருக்கிறார் நடிகை பூனம் பாண்டே . மேலும் இவர் இப்படி இறந்தது போல நாடகம் போட்டதற்கு முக்கிய காரணம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்த,

விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தானாம்.  அதனால் தான் இறந்து விட்டதாக இப்படி ஒரு வதந்தியை கிளப்பி விட்டதாக அவரே கூறியிருந்தார் . இதை பார்த்த ரசிகர்கள் இது மிகவும் மோசமான பப்ளிசிட்டி என்று கூறி வருகின்றனர்…

 

 

View this post on Instagram

 

A post shared by Poonam Pandey (@poonampandeyreal)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *