April 22, 2024

அயலான் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ..!! என்ன சொன்னார் தெரியுமா ..?? வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் சிவகார்த்திகேயன் ..!!

சமீப காலமாகவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வளர்ந்து வரும் கலைஞர்களை பாராட்டி வருவது பலருக்கும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது . அப்படி அண்மை காலமாக வெளியான நல்ல படங்களை பாராட்டியது மட்டுமல்லாமல் அவர்களை நேரில் வரவைத்து சால்வை போர்த்தி மரியாதை செய்து இருந்தார் ரஜினி . அப்படித்தான் இந்த நடிகர் தான் என்னோட ரோல் மாடல் என்று,

வெளிப்படையாக கூறுகிறார் ரஜினி . அவர் வேறு யாரும் இல்லை சிவகார்த்திகேயன் தான் . அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தான் அயலான்.  ஏலியனை மையமாக வைத்து ,

உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் நல்ல வரவேற்பையே பெற்றது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவினர்களையும் சிவகார்த்திகேயனையும்  மனதார பாராட்டி இருந்தாராம் . அதோடு எப்படி இது மாதிரி புது ஜானர் படங்களை,

தேர்வு செய்து நடிக்கிறீங்க எனக்கு ஆச்சிரியமாக இருக்கு என்று கேட்டாராம் ரஜினி . அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன் எந்திரன், 2.0 போன்ற படங்கள்தான் அயலான் படத்திற்கு இன்ஸ்பிரேசன் என்று சொல்லி இருக்கிறார் . இருந்தாலும் ரஜினிகாந்த் அயலான் படம் பார்த்த பிறகு,

நீங்க தான் என்னோட இன்ஸ்பிரேசன் என்று சிவகார்த்திகேயனை பாராட்டி இருக்கிறார் ரஜினி.  மேலும் ஒரு பெரிய நடிகர் இப்படி கூறுவதற்கு பெரிய மனசு வேண்டும் என்று ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை பாராட்டி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *