April 27, 2024

38 வது பிறந்தநாளை மனைவி , மகன்களுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் ..!! வெளிவந்த புகைப்படங்கள் ..!!

விக்னேஷ் சிவன் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ,நடிகர், பாடலாசிரியர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார் . கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான போடா போடி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் விக்னேஷ் சிவன்.  இருந்தாலும் இவர் பெரிய அளவில் பிரபலமானது நானும் ரௌடி தான் படத்தின் மூலம் தான்.  இந்தப் படத்தில் இருந்து தான் நயன்தாராவுக்கும் இவருக்கும் காதல் ஏற்பட்டது .

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், பாவ கதைகள் , காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன்  இப்படி இயக்குனராக கலக்கி கொண்டு வந்த விக்னேஷ் சிவன் ஒரு கட்டத்தில் தன்னுடைய,

மனைவியான நயன்தாராவுடன் சேர்ந்து பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார்.  இப்படி இருக்கும் நிலையில் கடந்த வருடம் திருமணமான விக்கி நயன்தாரா ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டனர்.  இந்நிலையில் நேற்று தன்னுடைய,

38 வது பிறந்தநாளை தன்னுடைய மனைவி மற்றும் மகன்களுடன் கொண்டாடியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.  அந்த புகைப்படத்தை தற்போது தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *