இந்த வருடம் தொடங்கியதிலிருந்தே அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற பஞ்சாயத்து தான் பெரிய அளவில் போய்க்கொண்டு இருக்கிறது . ஒரு பக்கம் நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார், சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார்னா அது ரஜினி மட்டும் தான் என்றும் கூறி வருகின்றனர்.
இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக விஜய் மட்டுமல்லாமல் பல நடிகர்களும் மறைமுகமாக வேலை செய்து வருகின்றனர். அப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிப்பதற்கு துடியாய் துடிக்கும் நடிகர்கள் ஏன் உலக நாயகனின் பட்டத்தை பெற விரும்பவில்லை . அதற்கான காரணம் தற்போது ,
வெளியாகி உள்ளது . அந்த வகையில் கமல்ஹாசனுக்கு உலகநாயகன் பட்டம் என்பது ஒரே நாளில் கிடைக்கவில்லை . சிறுவயதில் இருந்து இப்போது வரை தன்னுடைய அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியதால் தான் அவருக்கு அந்த பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது .
அது மட்டுமல்லாமல் கமல்ஹாசனுடன் மட்டும் நடிப்பில் எந்த நடிகராலும் போட்டி உள்ள முடியாது . இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் நடிப்பை தாண்டி இயக்குனர் , தயாரிப்பாளர் , பாடகர் , பாடலாசிரியர் என்று எல்லா,
துறைகளிலும் திறமை மிக்கவராக இருந்து வருகிறார் . இதனாலேயே எந்த காலத்திலும் அவரை தோற்கடித்து அடுத்த உலக நாயகன் ஆக முடியாது என்பதால் தான் அவருடைய பட்டத்திற்கு எந்த தமிழ் நடிகர்களும் ஆசைப்படவில்லை என்று கூறப்படுகிறது…