May 2, 2024

43 வயதானாலும் இன்னும் குழந்தை தான் ..!! பிறந்தநாள் புகைப்படத்தை வெளியிட்ட லைலா ..!! வாழ்த்து மழையில் ரசிகர்கள் ..!!

90 ஸ் ரசிகர்கள் இருந்த காலகட்டத்தில் இருந்த எந்த நடிகைகளையும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது . அந்த வகையில் பல பேரை கூறலாம் . அந்த வரிசையில் ஒருவர் தான் நடிகை லைலா . கடந்த 1999 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான கள்ளழகர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை லைலா.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ரோஜாவனம் ,முதல்வன் ,

பார்த்தேன் ரசித்தேன் ,தில் ,நந்தா ,தீனா ,உன்னை நினைத்து, மௌனம் பேசியதே, பிதாமகன் , உள்ளம் கேட்குமே , போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை லைலா.  குறிப்பாக தன்னுடைய சிரிப்பாலையே ரசிகர்களை வெகுவாக,

கவர்ந்திருந்தார் நடிகை லைலா.  மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,மலையாளம் , கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.பின்னர் திருமணமான பிறகு சினிமாவை விட்டு விலகி விட்டார் லைலா .இதன் பிறகு பல வருட ,

இடைவேளைக்குப் பிறகு சர்தார் என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி  கொடுத்துள்ளார் நடிகை லைலா.  இந் நிலையில் சமீபத்தில் தன்னுடைய 43 பிறந்த நாளை  கே பி ஒய் பாலா உடன் கொண்டாடியிருந்தார் லைலா . அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *