May 2, 2024

காப்பியடிப்பதில் அட்லீக்கே டப் கொடுக்கும் லோகேஷ் ..!! லியோ இத்தனை படங்களின் காப்பியா ..?? கடைசியில் உருண்டது என்னமோ விஜய்யின் தலை தான் ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை காப்பி என்று சொன்னாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது இயக்குனர் அட்லீயின் பெயர் தான்.  அப்படி இதுவரை இயக்குனர் அட்லீ இயக்கிய 5 படங்களுமே மற்ற படங்களில் இருந்து காப்பி அடித்தது தான்.  ஆனால் காப்பியடிப்பதில் அட்லீக்கே  அண்ணனாக இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . அந்த வகையில் தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக ,

இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் இதுவரை நான்கு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.  இப்படி வெற்றி படங்களை கொடுத்தும் தற்போது லியோ படத்திற்காக ஹாலிவுட் படங்களில் கையை வைத்து இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் . அந்த வகையில் ஆங்கிலத்தில்,

வெளியான ஹிஸ்டரி ஆப் வைலன்ஸ் என்ற படத்தின் கதை தான் லியோ படத்தின் கதையாம் . அது மட்டுமல்லாமல் லியோ படத்தின் டிரைலரில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகள் அப்படியே ஹாலிவுட் படங்களின் காட்சியை காப்பியடித்ததாக கூறப்படுகிறது.  இப்படி தமிழ் சினிமா,

ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்து வந்த லோகேஷ் இப்படி செய்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.என்னதான் இந்த ட்ரெய்லரை பார்த்த விஜய் ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வந்தாலும் , மற்ற ரசிகர்களை இந்த ட்ரெய்லர் பூர்த்தி செய்யவில்லை,

என்று தான் சொல்ல வேண்டும்.  அது மட்டுமல்லாமல் எப்போதும் போல இல்லாமல் இந்தப் படத்தில் கெட்ட வார்த்தை எல்லாம் பேசி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் நடிகர் விஜய்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *