May 1, 2024

சினிமா , அரசியல் இரண்டிலும் ரவுண்டு கட்டும் ..!! உதயநிதியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா ..?? நம்ப முடியலையே ..?? வெளிவந்த சொத்து விபரம் ..!!

உதயநிதி ஸ்டாலின் ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் , தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார் . ஆரம்பத்தில் தயாரிப்பாளராக கலக்கி கொண்டு வந்த உதயநிதி ஸ்டாலின் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.  இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது.

பின்னர் இந்த படத்தை தொடர்ந்து இது கதிர்வேலன் காதல் ,நண்பேண்டா, கெத்து ,மனிதன் ,சரவணன் இருக்க பயமேன் , நிமிர் ,சைக்கோ, நெஞ்சுக்கு நீதி போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார்.  மேலும் கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம்,

சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  அப்படி மாமணன் படத்தை  முடித்த கையோடு இனிமேல் சினிமாவில் நடிக்க போவதில்லை என்று அதிரடியாக அறிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின் . காரணம் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்டார் . இப்படி சினிமா அரசியல் இரண்டிலும்,

கலக்கிக் கொண்டு வரும் உதயநிதி ஸ்டாலினின் மொத்த சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது . அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடும் போது தனக்கு 22.28 கோடி அசையும் சொத்தும் , 6.54 கோடி அசையா சொத்தும் உள்ளதாக கூறியிருந்தார் உதயநிதி ஸ்டாலின் .

அப்படிப் பார்த்தால் இவருடைய மொத்த சொத்து மதிப்பே 28 கோடி தானா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.  அது மட்டுமல்லாமல் அவர் இந்த தகவலை சொல்லி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதால் இவருடைய சொத்து மதிப்பு இன்னும் அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *