April 28, 2024

என்ன தலைவரே இதெல்லாம் ..?? ஜி பி முத்து எடுத்த புது அவதாரம் ..!! வெளியான புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் ..!!

ஜி பி முத்து ஒரு பிரபலமான யூடியூப்  பிரபலம் மற்றும் நடிகர் ஆவார் . ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமான ஜி.பி முத்து தற்போது யூடியூபில் வீடியோ போட்டு கலக்கி கொண்டு வருகிறார்.  குறிப்பாக இப்போது தமிழ்நாட்டில் இவரை தெரியாத நபர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும் . அந்த அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு பிரபலமாக ,

இருந்து வருகிறார் ஜி பி முத்து.  அது மட்டுமல்லாமல் பிக் பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தார் ஜி பி முத்து . இதை யடுத்து தற்போது இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.  அந்த வகையில்,

தமிழில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு , வெற்றி நடிப்பில் வெளியான பம்பர் , விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான வள்ளிமயில் மற்றும் சமீபத்தில் புது முகங்கள் நடிப்பில் வெளியான பாபா பிளாக் ஷீப் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார் ஜி பி முத்து .

இப்படி சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜிபி முத்து தற்போது புதிய அவதாரம் எடுத்துள்ளார்.  அந்த வகையில் தற்போது ஆர்வன்  என்ற படத்தில் புதிய அவதாரத்தில் நடித்திருக்கிறார் ஜி பி முத்து . தற்போது அந்தப் படத்தின் போஸ்டரை தன்னுடைய சமூக வலைத்தள,

பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜி பி முத்து . இதைப் பார்த்த ரசிகர்கள் என்ன தலைவரே இதெல்லாம்.?  என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

 

 

View this post on Instagram

 

A post shared by @mani.aaarav

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *