April 29, 2024

லியோ படத்தில் இத்தனை கெட்ட வார்த்தைகளா ..?? கத்தரி போட்டு தூக்கிய சென்சார் போர்டு ..!! வெளிவந்த சென்சார் சர்டிபிகேட் ..!! என்ன லோகேஷ் இதெல்லாம் ..??

தற்போது விஜய் ரசிகர்கள் உச்சகட்ட எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருப்பது லியோ படத்திற்காக தான் .  அப்படி ஏற்கனவே லோகேஷ்கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.  இரண்டாவது முறையாக லியோ படத்தில் இருவரும் கூட்டணி அமைத்துள்ளனர் . இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் விஜய் உடன் இணைந்து திரிஷா ,சஞ்சய் தத்,

அர்ஜுன் ,கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர் ,பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் , மிஷ்கின் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.  எஸ் எஸ் லலித் குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார் . இந்த திரைப்படம் வருகின்ற 19ஆம் தேதி,

திரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . மேலும் சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி  ரசிகர்களிடையே  நல்ல வரவேற்பை பெற்றிருந்தது . அது மட்டுமல்லாமல் அந்த டிரைலரில் விஜய் கெட்ட வார்த்தை பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது .

இப்படி இருக்கும் நிலையில் லியோ படத்தின் சென்சார் சான்றிதழ் இணையத்தில் வெளியாகி உள்ளது.  அப்படி லியோ படத்தில் ஒரு கெட்ட வார்த்தை என்றால் பரவாயில்லை,  பல இடங்களில் கெட்ட வார்த்தை இடம்பெற்று இருக்கிறது.  அது மட்டுமல்லாமல் ரத்தம் தெறிக்கும் ,

பல காட்சிகளும் இருந்திருக்கிறது . இதனால் லியோ படத்தில்  மொத்தமாக 13 இடங்களில் சென்சார் போர்ட் கத்தரி போட்டுள்ளதாம். இதை பார்த்த ரசிகர்கள் என்ன லோகேஷ் இதெல்லாம் என்று கேள்விஎழுப்பி வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *