விஜய் ஆண்டனி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர் ,நடிகர் ,தயாரிப்பாளர், மற்றும் இயக்குனர் ஆவார் . கடந்த 2005ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் விஜய் ஆண்டனி. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து நான் அவன் இல்லை ,காதலில் விழுந்தேன் ,நினைத்தாலே இனிக்கும், வேட்டைக்காரன், அங்காடித்தெரு போன்ற பல திரைப்படங்களுக்கு ,
இசையமைத்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இப்படி இசைய மைப்பாளராக கலக்கி கொண்டு வந்த விஜய் ஆண்டனி நான் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதை தொடர்ந்து சலீம் ,இந்தியா பாகிஸ்தான் ,பிச்சைக்காரன், எமன், காளி போன்ற பல திரைப்படங்களில்,
நடித்திருந்த விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தை இயக்கி நடித்திருந்தார் . இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. இப்படி தமிழ் சினிமா உலகில் இசையமைப்பாளர் ,நடிகர், தயாரிப்பாளர் ,பாடகர், படத்தொகுப்பாளர் ,இயக்குனர் என்று பன்முகம் கொண்ட ,
விஜய் ஆண்டனி எங்கு சென்றாலும் மிகவும் எளிமையாக தான் செல்கிறார் . ஆனால் அவரிடம் கோடிக்கணக்கில் சொத்து உள்ளதாம். அந்த வகையில் நடிகர் விஜய் ஆண்டனியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது . அதோடு இவருக்கு,
சென்னை மற்றும் பெங்களூரிலும் பெரிய பங்களா உள்ளதாம் . குறிப்பாக மூன்று சொகுசு கார்கள் வைத்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி . இதைப் பார்த்த ரசிகர்கள் இத்தனை கோடி சொத்து இருந்தும் இவ்வளவு எளிமையாக இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்…